திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (20:00 IST)

சிலப்பதிகாரத்தில் கெத்து, வெச்சு செய்வதெல்லாம் இருந்தது – தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர்

சிலப்பதிகாரத்தில் கெத்து, வெச்சி செய்வது போன்ற வார்த்தைகள் இருந்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் இணையா மாநாடு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் “தற்போது உலகில் உள்ள செம்மொழிகளில் சீன மொழியும், தமிழ் மொழியும்தான் பேசக்கூடிய மொழியாக இருக்கின்றன. அதனால் மாணவர்கள் தங்கள் அன்றாட பயன்பாட்டில் தமிழை அதிகம் பேச வேண்டும்.

தற்போதைய இணைய உலகில் ஆங்கிலமே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. 0.01 சதவீதம்தான் தமிழ் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மாணவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ ‘கெத்து’ , ‘வெச்சி செய்வது’ போன்ற வார்த்தைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த வார்த்தைகள் எல்லாம் புதியவை அல்ல. ஏற்கனவே சிலப்பதிகாரம் போன்ற பழம்பெரும் காப்பியங்களில் அவை இடம்பெற்றுள்ளன” என்று பேசியுள்ளார்.

இது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அது உண்மைதானா என்று இணையத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.