அரசு ஊழியர்களுக்கு முன்பணம் 10 ஆயிரம்! – ஊழியர்கள் மகிழ்ச்சி

money
Prasanth Karthick| Last Modified வியாழன், 19 செப்டம்பர் 2019 (14:34 IST)
பண்டிகை காலத்தை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் முன்பணம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் மக்களுக்கு வரவை மீறிய செலவுகள் ஏற்படுகின்றன. அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்போரும் பண பற்றாக்குறையால் பல இடங்களில் வட்டிக்கு கடன் வாங்கும் சூழல் உள்ளது. இதை தவிர்க்க தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் வட்டியில்லா முன்பணம் அளிப்பது வழக்கம்.

கடந்த ஆண்டு வரை முன்பணம் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் முன்பணத் தொகையை உயர்த்தி 10 ஆயிரமாக வழங்குகிறது அரசு. இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :