செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2019 (17:41 IST)

தீபாவளி சிறப்பு பேருந்துகள் முன்பதிவு!! – களைகட்டும் தீபாவளி ஏற்பாடுகள்

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் மற்றும் அவற்றிற்கான முன்பதிவு குறித்த நடவடிக்கைகளை இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

வருடாவருடம் தீபாவளிக்கு சென்னையிலிருந்து மக்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் பேருந்துகளிலும், ரயில்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்கள் பாதுகாப்பாக தங்கள் ஊர்களுக்கு சென்று வரவேண்டும் என்ற நோக்கத்தில் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது.

இந்த ஆண்டிற்கான தீபாவளி அடுத்த மாதம் அக்டோபர் 27ல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அப்போது அவர் “தீபாவளிக்கு மக்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று வர உதவும் வகையில் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதற்கென சென்னையின் 5 பகுதிகளில் சிறப்பு பேருந்து நிலையங்கள் ஏற்படுத்த உள்ளோம்.
அதன்படி ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்கு மாதவரத்திலும், வேலூர், சேலம் மாவட்டம் செல்லும் பேருந்துகளுக்கு பூந்தமல்லியிலும் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

மேலும், தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளுக்கு தாம்பரத்திலும், கோயம்பேட்டில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும்.

சிறப்பு பேருந்துகள் தீபாவளி முடிந்து மக்கள் ஊர் திரும்பும்வரை இயக்கப்பட உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவுகள் அக்டோபர் 23ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.