1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. t rajendar support tvk leader vijay

விஜய் தற்குறின்னா நீங்களாம் யாரு?!. உங்களுக்கெல்லாம் இருக்கு!.. டி.ராஜேந்தர் பொங்கிட்டாரே!...

t rajendar
திரையுலகிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் விஜயும் ஒருவர். ஆனால் இதற்கு முன் திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்த யாருக்கும் கிடைக்காத வரவேற்பு விஜய்க்கு கிடைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். நடிகர் எம்ஜிஆர் கட்சி துவங்கிய போது எவ்வளவு வாக்குகளை பெற்றாரோ அதைவிட அதிக வாக்குகளை விஜய் பெறுவார் என அவர்கள் ரசிகர்கள் நம்புகிறார்கள்.

ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து தீவிரமான அரசியல் செய்து வருகிறார் விஜய். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவரின் தவெக 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. கண்டிப்பாக 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை தவெக வாங்கும் என கணிக்கப்படுகிறது. ஆனால் தவெக நிர்வாகிகள் நாங்கள் 40 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று ஆட்சி அமைப்போம்.. விஜய் முதலமைச்சராவார் என தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்..

ஒருபக்கம் விஜயையும், விஜய் ரசிகர்களையும் திமுக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும், ஆதரவாளர்களும் தொடர்ந்து தற்குறி என விமர்சித்து வருகிறார்கள். இது தொடர்பாக கருத்து தெரிவித்த டி.ராஜேந்தர் ‘விஜயை பார்த்து பயந்து போய் தற்குறி என்று சிலர் சொல்கிறார்கள்.. அரசியலுக்கு வந்து கோடிக்கணக்கான வாக்குகளை பெற்ற விஜய் தற்குறி என்றால் இத்தனை காலம் மக்களை ஏமாற்றி பிழைத்து நீங்கள் என்ன அறிவாளிகளா?.. இன்று படித்தவர்கள் அதிகம் இருக்கும் ஒரே கட்சி தவெகதான்.. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெரிய சாதனை படைப்பார்.. அப்போது அவரை விமர்சித்தவர்கள் வாயை மூடிக் கொள்வார்கள்’ என பேசியிருக்கிறார்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
தர்பூசணி காரணமல்ல!.. 3 பேர் இறந்த சம்பவத்தில் திருப்பம்..