1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. T.Rajendar angry with karunanithi press meet

கருணாநிதியை நம்பி மோசம் போய் விட்டேன் : டி.ராஜேந்தர் கோபம்

கருணாநிதியை நம்பி மோசம் போய் விட்டேன் : டி.ராஜேந்தர் கோபம்

T.Rajendar
திமுக தலைவர் கருணாநிதியை நம்பி, தான் மோசம் போய் விட்டதாக நடிகரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது “மத்திய அரசு, காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்க வேண்டும். காவிரி நீருக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நீதிமன்றம் வரை சென்று போராடினார். தற்போது அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.
 
அவர் தொடர்ந்து பேசிய போது “கருணாநிதி தனது பிள்ளைகளுக்காக யாரை வேண்டுமானாலும் இழப்பார். அதனால்தான், அப்போது திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரையே அவர் தூக்கி எறிந்தார். எம்.ஜி.ஆருக்கு முன்னால் நாம் எல்லாம் எம்மாத்திரம். 
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று நான் உறுதியாக இருந்தேன். ஆனால், தான் முதல்வராக விரும்புவதாக கலைஞர் கண் கலங்கிப் பேசினார். அதனால், எந்த அணியிலும் சேராமல் ஒதுங்கி இருந்தேன். அவரிடம் விசுவாசம் காட்டிய நான் மோசம் போய் விட்டேன்” என்று கூறினார்.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
ஸ்டாலின் லண்டன் போகும் காரணத்தை திமுக கூறட்டும்: அதிமுக தடாலடி!