வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (22:10 IST)

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு

chennai
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.
 
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில்  நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், கேளிக்கை விடுதி அமைந்துள்ள பகுதியில் இருந்து 240 அடி தொலைவில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் விபத்து நடைபெற்றுள்ள கட்டிடத்திற்கு எந்தவித அதிர்வும் ஏற்படவில்லை என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.