வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2024 (15:39 IST)

எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டு போட்டால் குப்பைத் தொட்டியில் போடுவதற்கு சமம்; ஜி.கே.வாசன்

gk vasan
எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் வாக்கு போட்டால் அந்த வாக்குகள் குப்பை தொட்டியில் போடுவதற்கு சமம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
cயில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும்  நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நிலையில் வேட்பாளராக பாஜக சார்பில் போட்டியிடும் அமைச்சர் நமச்சிவாயத்திற்கு ஆதரவாக ஜிகே வாசன் பிரச்சாரம் செய்தார் 
 
அப்போது காமராஜர் அவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் முதல்வராக ரங்கசாமி திகழ்கிறார் என்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் என்றும் கூறினார் 
 
இந்தியாவில் பசி பட்டினிஇல்லை என்றும் நாட்டின் பொருளாதாரம் மிக சிறப்பாக பிரதமர் மோடியால் கையாளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். நமச்சிவாயம் வெற்றி பெற்றால் பிரதமர் மோடியுடன் மத்திய அரசுடனும் ஒத்த கருத்துடன் இருப்பார் என்றும் ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டு போட்டால் உங்கள் ஓட்டுகள் குப்பை தொட்டியில் போட்டதற்கு சமம் என்றும் உங்கள் ஓட்டுகளை வீணாக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார் 
 
உங்கள் ஓட்டுக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது அதை நீங்கள் தான் நிலை நாட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்
 
Edited by Mahendran