வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 மார்ச் 2024 (07:24 IST)

ஓபிஎஸ் பரவாயில்லை.. ஏசி சண்முகம் பெயரில் 9 சண்முகங்கள் போட்டி.. வேலூரில் பரபரப்பு..!

வேலூர் தொகுதியில் பாஜக சார்பில் ஏசி சண்முகம் போட்டியிட அவரது பெயரிலேயே 9 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர்செல்வம் பெயரில் மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டு வாக்காளர்களை குழப்பம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் வேலூர் பகுதியில் ஏசி சண்முகம் போட்டியிடுவதால் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களின் எட்டு பேர் சண்முகம் என்ற பெயரில் இருப்பதாகவும் அதில் ஒருவர் ஏசி சண்முகம் என்றே இருப்பதாகவும் தெரிகிறது.

இது குறித்து ஏசி சண்முகம் தரப்பினர் கூறிய போது வாக்காளர்களை குழப்புவதற்காக சண்முகம் என்ற பெயரில் ஆட்களை தேடி பிடித்து திமுகவினர் மனு தாக்கல் செய்ய வைத்திருக்கின்றனர் என்றும், தேர்தல் களம் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்பதால் நாங்கள் அவர்களுக்கு சவாலாக இருப்பதால் இப்படி செய்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.

ஏற்கனவே நாங்கள் வீடு தோறும் தாமரை சின்னத்தை கொண்டு சேர்த்திருக்கிறோம் என்றும் அதனால் எங்கள் வெற்றி குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளராக பசுபதி, நாம் தமிழர் வேட்பாளராக மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva