செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (04:50 IST)

தமிழக பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு: ஓங்கி ஒலித்தது கோவிந்தா முழக்கம்

ஒவ்வொரு வருடம் வைகுண்ட ஏகாதேசி தினத்தில் தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பது வழக்கமாக இருக்கும் நிலையில் இன்று அதிகாலை  வைகுண்ட ஏகாதேசி தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் உள்பட தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் என்ற பரமபதம் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறக்கப்பட்டவுடன் பக்தர்கள் 'கோவிந்தா... கோவிந்தா...' என்ற முழக்கத்துடன் சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்

சென்னையில் உள்ள பழமையான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை சரியாக  5 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதற்காக இரவு முழுவதும் காத்திருந்த பக்தர்கள் சொர்க்கவாசல் திறந்தவுடன் பரமபத வாசலில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு எதிர்சேவையில் காட்சித் தந்தார்.

அப்போது பக்தி பரவசத்துடன் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்  'கோவிந்தா... கோவிந்தா...'என்ற முழக்கத்துட்டனர். இன்று பரமபத வாசல் திறக்கப்படுவதை அடுத்து கோவில் நிர்வாகிகள் சிறப்பு ஏற்பாட்டையும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்திருந்தனர்.