பக்தர்களை தேற்றி இறுதி நாட்களுக்கு தயாரான பாபா

நான் என் உடலைவிட்டுப் போனாலும் உங்கள் அனைவரையும் காத்து வருவேன். நீங்கள் எப்போது அழைத்தாலும் உங்களைக் காப்பாற்ற ஓடோடி வருவேன். சிறிது காலத்திற் குத்தான் நான் மேலே செல்கிறேன். மறுபடியும் உங்களிடம் கட்டாயம் வருவேன். என் அன்பர்களைவிட்டு நான் இருக்க இயலாது. 
நான் மறைந்தாலும் என் அருள் இயக்கத்தால் இந்தப் பிரதேசம் முழுவதும் சுறுசுறுப்படையும். அதை நீங்கள் பார்த்து  மகிழத்தான் போகிறீர்கள்!” என்று பாபா உறுதிபடக் கூறினார். இதை அவர் ஒரு வாக்குறுதிபோலவே தம் அடியவர்களிடம் தெரிவித்தார். அடியவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். 
 
இவ்விதமெல்லாம் உறுதியளித்து பாபா மெல்ல மெல்லத் தம் அடியவர்களைத் தமது மறைவுக்குத் தயார் செய்தார். 1918  அக்டோபர் பதினைந்தாம் தேதி. அன்று விஜயதசமி நாள். அவர் இயற்கைப் பெருவெளியில் கலக்க நினைத்த நாள். 
 
எல்லாரையும் சீக்கிரம் போய்ச் சாப்பிடுங் கள் என்று சொன்னார் பாபா. தம் பக்தையான லட்சுமியை மட்டும் இருக்கச் சொன்னார். தம் தலையணை அடியிலிலிருந்து தாம் வைத்திருந்த ஒன்பது நாணயங்களை எடுத்தார். அவற்றை தம் உள்ளங்கையில் வைத்தவாறு, “”இவை ஒன்பது விதமான கடவுள் ஈடுபாட்டைக் குறிப்பவை. 
 
இவற்றை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்!’ என்று சொல்லிலி கனிவோடு லட்சுமியிடம் கொடுத்தார். லட்சுமி ஒரு  விம்மலுடன் அந்த நாணயங்களை வாங்கிக் கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவளுக்கு பாபா  விடைபெறப் போகிறார் என்ற உண்மை புரிந்துவிட்டது. பாபாவின் தலை சாய்ந்தது. 
 
பாபாவின் பொன்னுடல் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்துக்களும் முஸ்லிம்களுமான ஆயிரக்கணக்கான அடியவர்கள்  பாபாவின் பொன்னுடலுக்கு வந்து அஞ்சலி செலுத்திக் கதறினார்கள். சாயிபாபாவின் பொன்னுடல் பூட்டிவாடா என்ற இடத்தில்  உள்ள திருக்கோவிலிலில் அடக்கம் செய்யப்பட்டது. ஓம் என்ற பிரணவ மந்திரம் ஒருபுறம் ஒலிக்க, அல்லாஹூ என்ற  இஸ்லாமியர்களின் முழக்கம் ஒருபுறம் ஒலிக்க, பாபா மண்ணில் புதையுண்டார்.


இதில் மேலும் படிக்கவும் :