மீண்டும் எஸ்.வி.சேகரின் சர்ச்சை டுவீட்!!! கொல கோபத்தில் நெட்டிசன்கள்

sekar
Last Modified ஞாயிறு, 27 ஜனவரி 2019 (11:16 IST)
தமிழகத்திற்கு வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவை எஸ்.வி.சேகர் விமர்சித்து பேசியுள்ளார்.
 
 


மதுரைக்கு அருகேயுள்ள தோப்பூரில் 1200 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நீண்ட இழுபறிகளுக்குப் பின் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை மண்டேலா நகரில் நடைபெறுகிறது. இதற்கான இன்று முற்பகல் சிறப்புத் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து மதுரைக்கு வருகிறார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

மோடி வருகையையொட்டி டிவிட்டரில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. மோடி எப்பொழுது தமிழகத்திற்கு வந்தாலும் டிவிட்டரில் கோ பேக் மோடி ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி விடுகிறது. 

இந்நிலையில் எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் 
வீட்டுக்கு வந்தா ஹிஹிஹிந்னு கையப்பிடிச்சுகிட்டு பல்லிளிக்க வேண்டியது. வெளில வந்தா பலூன் விட வேண்டியது. கொள்கைக்கும் நடத்தைக்கும் சம்மந்தமில்லாதவர்கள். பாவம் தமிழகம் என பதிவிட்டுள்ளார். இவர் ஸ்டாலினை தான் இப்படி விமர்சித்திருக்கிறார்.
இதில் மேலும் படிக்கவும் :