பிரபல நடிகரின் அடுத்த படத்தில் மீண்டும் இணையும் நயன்தாரா-தமன்னா

Last Modified ஞாயிறு, 27 ஜனவரி 2019 (11:05 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளான நயன்தாராவும், தமன்னாவும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளாக உள்ளனர். இருப்பினும் இதுவரை இணைந்து நடிக்காத இந்த இரு நடிகைகளும் தற்போது உருவாகி வரும் சிரஞ்சீவியின் 'சயிரா நரசிம்மரெட்டி' படத்தில் முதல்முறையாக இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிரஞ்சீவியின் அடுத்த படத்திலும் அதாவது 'சிரஞ்சீவி 152; படத்தில் நயன்தாராவும், தமன்னாவும் நாயகிகளாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் இருவருமே சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'சயிரா நரசிம்மரெட்டி' படத்தில் நயன்தாராவும், தமன்னாவும் நடித்தாலும் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் இல்லை. ஆனால் சிரஞ்சீவியின் 152வது படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும் அதிக காட்சிகள் இருப்பதாகவும் இந்த காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :