1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 27 ஜனவரி 2019 (10:52 IST)

ராகுல் மற்றும் கட்கரி vs மோடி – கவனத்தை ஈர்த்த பேச்சு !

குடியரசு தினவிழா அணிவகுப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பாஜக அமைச்சர் நிதின் கட்கரியும் அருகருகே அமர்ந்து தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய நாட்டின் 70 ஆவது குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாக் கொண்டாட்டத்தில் பிரதமர், ஆளுநர் , எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாஜக அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

கொடியேற்றத்திற்குப் பிறகு  முப்படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் வண்ணமயமானக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுப் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாகின. அதேப் போல மற்றொரு முக்கியமான விஷயமும் ஊடகங்களுக்கு விருந்தாகியது.

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பாஜக -வின் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் அருகருகே அமர்ந்து மகிழ்ச்சியாக வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். இது டெல்லி அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

சமீபகாலமாக நிதின்கட்கரி காங்கிரஸ் தலைவர்கள் நேரு மற்றும் இந்திரா காந்தியைப் புகழ்ந்து பேசியதும் மோடிக்குப் பதிலாக நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என பாஜக வில் குரல்கள் எழுந்துள்ளதும் நிதின் கட்கரி மீது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துளது. இதனால் ராகுல் மற்றும் கட்கரி எது சம்மந்தமாகப் பேசியிருப்பார்கள் என அறிந்துகொள்ள காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் ஆர்வமாக உள்ளனர்.