செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 நவம்பர் 2021 (17:41 IST)

மன்னிப்பு கேட்டால் மணியார்டர் அனுப்புகிறோம்: சூர்யாவுக்கு பாமக பிரமுகர் கோரிக்கை

சூர்யா மன்னிப்பு கேட்டால் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் மணியார்டர் செய்கிறோம் என பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் சேகர் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டதால் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு அவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் மணியார்டர் செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்
 
அவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழகத்தில் அமைதி நிலவவும் கலவரத்தை தடுக்கவும் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்