செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 19 நவம்பர் 2021 (18:34 IST)

சூர்யா படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன்

சூர்யாவின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி வெளியிட உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் சிவகார்த்திகேயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தலா ஒரு பாடலை எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது ஏற்கனவே விஜய்யின் பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளார் என்பது தெரிந்தது