ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (08:15 IST)

அமைச்சர் செங்கோட்டையன் முன் கதறி அழுத சூர்யா: என்ன காரணம்?

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்ட ஒரு விழாவில் நடிகர் சூர்யா மேடையிலேயே கதறி அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை தி நகரில் நடந்தது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர் 
 
இந்த விழாவில் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் உதவியால் படித்து தற்போது நல்ல நிலையில் இருக்கும் ஒரு ஏழை மாணவி, தன்னுடைய சிறுவயது அனுபவங்கள் மற்றும் வறுமையால் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக கூறினார். அதன் பின்னர் அகரம் அறக்கட்டளையால் கஷ்டப்பட்டு படித்து தற்போது ஒரு நல்ல நிலையில் முன்னேறி இருப்பதாகவும் தன்னை போல் கஷ்டப்படும் பல மாணவ மாணவிகளை உதவி செய்து அவர்களுக்கு நல்ல வழியைக் காட்ட போவதாகவும் அவர் தெரிவித்தார் 
 
அந்த மாணவி தன்னுடைய சிறுவயதில் பட்ட கஷ்டங்களை நெகழ்ச்சியுடன் கூறியபோது மேடையிலிருந்த சூர்யா உட்பட பல விஐபிகள் கண்கலங்கினார். குறிப்பாக சூர்யா கிட்டத்தட்ட கதறி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
அதன் பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அந்த மாணவியை தட்டிக் கொடுத்த சூர்யா, அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்தார். சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கான கல்வி பயில முடியாத பல மாணவ மாணவிகள் தற்போது நல்ல நிலையில் உள்ளனர் என்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது