புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 ஜனவரி 2020 (17:41 IST)

சூரரை போற்று டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் இசையில் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் ’சூரரைப்போற்று’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என இன்று காலை ஜிவி பிரகாஷ்குமார் அறிவித்திருந்தார்
 
இந்த நிலையில் தற்போது அந்த செய்தி சூப்பரான செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் வரும் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் இந்த தகவலை சமூகவலைதளத்தில் பரப்பி வருகின்றனர்
 
மேலும் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வருகிறது