திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (12:20 IST)

9 வருடங்கள் கழித்து நிலைநாட்டப்பட்ட நீதி – கற்பழித்தவனுக்கு மரண தண்டனை

கோவையில் 2010ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது உச்ச நீதி மன்றம்.

கடந்த 2010ம் ஆண்டு கோயம்புத்தூரை சேர்ந்த முஸ்கான் என்ற சிறுமியையும், அவளது தம்பி ரித்திக் என்ற சிறுவனையும் மனோகரன் என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் மனோகரன். ஆனால் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் மனோகரனுக்கு மரண தண்டனை வழங்கி தீர்பளித்தது.