திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 27 ஜூன் 2018 (12:24 IST)

மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் : உச்ச நீதிமன்றம் பரிந்துரை

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதி சத்தியநாராயணனை மூன்றாவது நீதிபதியாக உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

 
8 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகிய இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை கூறியுள்ளதால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.   
இந்த வழக்கில் மூன்றாம் நீதிபதியாக விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்தார். எனவே, அவரே இந்த வழக்கை விசாரிப்பா என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், இந்த வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் அல்லது வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என 17 எம்.எல்.ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் 3வது நீதிபதியாக சத்தியநாராணனை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல்,  நீதிபதி விமலா மீதான குற்றச்சாட்டை தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் திரும்ப பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.