தகுதி நீக்க வழக்கு விசாரணை - முதல்வர் சார்பில் கேவியட் மனு
17 எம்.எல்.ஏ க்கள் தகுதிநீக்க வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ள நிலையில், அந்த வழக்கில் தமிழக அரசின் வாதத்தையும் கேட்குமாறு என எடப்பாடி சார்பில் கேவியட் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று ஒரு நீதிபதியும், செல்லாது என்று இன்னொரு நீதிபதியும் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை கூறியுள்ளதால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. .
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்காமல், இதனை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற 17 பேர் கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 27–ந் தேதி (இன்று) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர்.
இந்நிலையில் முதல்வர் சார்பில் தகுதிநீக்க வழக்கில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்ட பின்னரே தீர்ப்பளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.