செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 மே 2019 (08:31 IST)

தமிழகத்தில் இன்று கனமழை – வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு !

தமிழகத்தில் நேற்று பல இடங்களில் வெப்பச்சலன மழை பெய்ததைப் போல இன்றும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மக்கள் கோடை வெயிலை சமாளிக்க படாதபாடு பட்டு வருகின்றனர். இந்நிலையில் மண்ணைக் குளிர்விக்கும் விதமாக நேற்று தமிழகத்தின் சில பகுதிகளில் மழைப் பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக இந்த மழைப் பெய்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

நேற்றைப் போல இன்றும் தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும் இந்த சூழ்நிலையில் மழைப் பற்றிய செய்தி பெரிய ஆறுதலாய் அமைந்துள்ளது.