13 காவல்நிலையங்களில் கமல்ஹாசன் மீது புகார்: முன்ஜாமீன் கேட்டு மனு

kamal
Last Updated: புதன், 15 மே 2019 (19:11 IST)
அரவக்குறிச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசியதை தொடர்ந்து அவர்மீது பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. தற்போது 13 இடங்களில் கமல்ஹாசனுக்கு எதிரான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதையடுத்து மதுரையில் உள்ள கிளை நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு அளித்தார். அதில் தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணை நடத்தக்கோரியும் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை பார்வையிட்ட மதுரை கிளை நீதிபதி புகழேந்தி ”வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கான தடையை விடுமுறைகால அமர்வில் விசாரிக்க இயலாது. மனுதாரர் முன் ஜாமீன் கோரி மனு அளித்தால் அது பரிசீலிக்கப்படும் “ என்று பதிலளித்தார்.
 
இதனால் கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவிற்கான விசாரணை நாளை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :