புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 15 மே 2019 (09:13 IST)

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில்... வெதர் ரிபோர்ட் விவரம் உள்ளே!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தின் சில பகுதிகளில் வெயிலுக்கு இதமாக் நல்ல மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் 10 தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு, 
 
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.  
 
சனிக்கிழமை வரை லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் சில இடங்களில் வெயிலின் தாக்கம் தொடரும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் ஓரளவு மேக மூட்டமாக மட்டுமே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.