நேற்று மட்டும் 8 முறை தாக்கிய சூரிய புயல்! – வான் இயற்பியல் ஆய்வு மையம் தகவல்!
சூரிய காந்த புயல் நேற்று மட்டும் பூமியை 8 முறை தாக்கியதாக கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சூரியனில் ஏற்படும் சிறு பிளவுகளால் வெப்ப பேரலை உருவாகி சூரிய புயல் உருவாகிறது. இவ்வகை சூரிய புயல்களை பூமியின் காந்தபுலம் ஓரளவு தடுத்தாலும் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக சூரிய காந்த புயல்களால் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம்.
கடந்த சில நாட்கள் முன்னதாக பூமியை சக்திவாய்ந்த சூரிய காந்த புயல் தாக்க உள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இதன் தாக்கம் குறித்து கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வு மையம் 5 தொலைநோக்கிகள் மூலம் கண்காணித்து வந்தது. இந்த காந்த புயல் நேற்று மட்டும் பூமியை 8 முறை தாக்கியதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் தீவிரமடைந்தால் செயற்கைக்கோள், ஜிபிஎஸ் உள்ளிட்ட தொலைதொடர்பு தொழில்நுட்பங்களில் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.