1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (14:38 IST)

துபாய் போய் குளறுபடி பண்ணிட்டு வந்திருக்கார்! – மு.க.ஸ்டாலின் குறித்து உதயகுமார்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்று குளறுபடி செய்து வந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு மூதலீடுகளை ஈர்ப்பதற்காக நான்கு நாட்கள் சுற்றுபயணமாக துபாய் சென்று நேற்று திரும்பினார். துபாயில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் 2 லட்சம் தமிழர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முதல்வரின் துபாய் சுற்றுப்பயணம் குறித்து பேசியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் “அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி துபாய் சென்று ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை பெற்று வந்தபோது திமுக ஏளனம் செய்தது. ஆனால் தற்போது திமுகவே துபாய் சென்று ஏற்கனவே செய்யப்பட்ட முதலீடுகளில் பல குளறுபடிகளை செய்துவிட்டு வந்துள்ளது” என கூறியுள்ளார்.