பொதுமக்களே உஷார்… காத்திருக்கு கடும் வெயில்! – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு வழக்கத்தை விட வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பலர் சாலையோர இளநீர் கடைகள், பழச்சாறு கடைகளை நாடும் நிலை உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு வழக்கமாக வீசும் வெயிலை விட அதிக வெயில் வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்கினி நட்சத்திரம் தொடங்கும் முன்னதாகவே வெயில் வாட்டுவது மக்களுக்கு அன்றாட வேலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.