1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sudhakaran to be released within 3 to 4 days

3 - 4 நாட்களில் விடுதலையாகும் சுதாகரன்: சசிகலா நிலை என்ன?

சுதாகரன்
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சிறையில் இருக்கும் சுதாகரன்  அடுத்த 3 - 4 நாட்களில் விடுதலையாக வாய்ப்பு என தகவல். 
 
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தன்னை முன்கூட்டியே சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் சுதாகரன் கோரிய மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதை அடுத்து அவர் விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
அந்த வகையில் தற்போதைய தகவலின் படி சுதாகரன் பெங்களூர் சிறையில் இருந்து அடுத்த் 3 அல்லது 4 நாட்களில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  ஆனால் சசிகாலா ஜனவரி 27 ஆம் தேதி தான் விடுதலை ஆவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash