1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (10:18 IST)

திடீரென நடு ரோட்டில் பற்றி எரிந்த கார்! அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!

Car Fire
திருப்பூர் மாவட்டம்  தாராபுரத்தில் திருப்பூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (62 ) இவரது மனைவி ஈஸ்வரி (53 ) ஆகியோர் திருப்பூரிலிருந்து தாராபுரத்திற்கு உறவினரின் துக்க நிகழ்வை முடித்துக் கொண்டு தாராபுரம் புறவழிச் சாலை வழியாக திருப்பூரை நோக்கி தனது ஹோண்டா அமேஸ் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர்.


 
அப்போது தாராபுரம் திருப்பூர் சாலை இடையன்கிணறு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது காரின் அடிப்பகுதியிலிருந்து குபு குபு என கரும்புகை வந்தது இதனை கண்ட ஈஸ்வரமூர்த்தி மற்றும் இவரது மனைவி ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்து காரினை சாலையில் நிறுத்தினார்.

அதன் பிறகு அவர்கள் இறங்கிய சில வினாடிகளில் திடீரென காரின் முன் பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் காரின் அருகில் இருந்து தப்பி ஓடினர்.

அப்போது கார் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும், கடைகாரர்களும் தண்ணீரை ஊற்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை ப அடித்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

இதில் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. மேலும் காரில் இருந்த ஒருவரது செல்போன் மற்றும் காரில் வைத்திருந்த பொருள்கள் காரின் ஆவணங்கள் ஆகியவை முழுவதும் எரிந்து நாசமானது இது குறித்து குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குண்டடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து கார் எதனால் தீ பற்றியது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

புறவழிச்சாலை பகுதியில் கார் எரிந்த சம்பவம் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.