வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (13:57 IST)

திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  எனது சொந்த வேலை காரணமாக நமது சங்கத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். இதுகாறும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று அறிவித்துள்ளார். 
 
சமீபத்தில் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களுக்கு சொந்தமான திரையரங்கில் அரசு நிர்ணயத்தை காட்சிகளை விட அதிக காட்சிகள் திரையிடப்பட்டதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
 
 இதனை அடுத்து தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
 
Edited by Siva