செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 9 டிசம்பர் 2020 (17:21 IST)

சென்னையில் நங்கநல்லூர் சாலையில் திடீர் பள்ளம்!

சென்னையில் நங்கநல்லூர் சாலையில் திடீர் பள்ளம்!
சென்னை சாலைகளில் அவ்வப்போது திடீர் திடீரென பள்ளங்கள் தோன்றுவதும் அதனால் ஒரு சில விபத்துக்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் மெட்ரோ ரயில் செல்லும் பாதைகளில் அவ்வப்போது சில இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் தற்போது சென்னை நங்கநல்லூர் சாலையில் திடீரென ஒரு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நங்காநல்லூர் ஒன்றாவது பிரதான சாலையில் சுமார் 10 அடி அகலத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது
 
இது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பள்ளத்தை நிரப்பும் பணிகள் பணி விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சாலையில் மீண்டும் மிகப்பெரிய பள்ளம் திடீரென தோன்றி இருப்பது பெரும் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது