1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate decreases today in Chennai

தங்கத்தின் விலை குறைந்தது: கிராம் எவ்வளவு தெரியுமா?

தமிழகம்
கடந்த சில நாட்களில் மெல்ல விலை குறைந்து வந்த தங்கம் விலை சில நாட்கள் உயர்வுக்கு பின்னர் இன்று விலை குறைந்துள்ளது.  
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.    
 
இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை தீபாவளிக்கு பிறகு ஒரு வாரத்திற்கு விலையில் சரிவை சந்தித்தது. அதன்பின்னர் விலை உயர்ந்து மீண்டும் விலை குறைப்பை கண்டுள்ளது. 
 
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.24 குறைந்து ரூ.4,684-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
அரசியல் சாணக்கியர் அஸ்திரத்திற்கும் அசராத விவசாயிகள்! – தொடரும் போராட்டம்!