1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 9 டிசம்பர் 2020 (10:34 IST)

சென்னையில் பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு:

தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டம் நொளம்பூர் என்ற பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய் ஒன்றில் தாய்-மகள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இதனை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பாதாள சாக்கடை பராமரிப்பின்றி இருப்பது குறித்து கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் தாய் மகள் உயிரிழந்த விவகாரத்தில் தனது இரங்கல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருடைய குடும்பத்திற்கு நிவாரண நிதி உதவியும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரத்தை அடுத்து சென்னையிலும் பாதாள சாக்கடை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் நரசிம்மன் என்பவர் இன்று காலை நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் தவறி பாதாள சாக்கடை குழியில் விழுந்தார்.
 
இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயலும் போது அவரை உயிரற்ற உடலாகத்தான் மீட்க முடிந்தது. காஞ்சிபுரத்தில் தாய்-மகள் பாதாள சாக்கடையில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் பொதுமக்கள் மீளாத நிலையில் தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது