வியாழன், 22 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Updated : புதன், 18 ஜனவரி 2017 (13:28 IST)

பீட்டாவுக்கு என் ஆதரவு உண்டு; நிதியுதவி கூட கொடுக்கிறேன். ஆனால்?- பிரபல பாடகியின் பதிவு

பீட்டாவுக்கு என் ஆதரவு உண்டு; நிதியுதவி கூட கொடுக்கிறேன். ஆனால்?- பிரபல பாடகியின் பதிவு
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்ககோரி தமிழகமெங்கும் போராட்டம் அதிகரித்து வருகிறது. கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். ஜல்லிக்கட்டு தடை நீக்க வேண்டும்  மற்றும் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று பலத்த கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளது.


 

இந்நிலையில் பிரபல பாடகி சுசித்ரா தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். அதில் நான் பீட்டாவை ஆதரிக்கிறேன். அவர்களுக்கு நிதியுதவி அளிக்கிறேன். நான் சொந்தமாக விலங்குகளைத் தத்தெடுத்துள்ளேன். ஆனாலும், ஜல்லிக்கட்டுக்கு என் ஆதரவை அளிக்கிறேன். காரணம் எனது மக்கள் அதனை விரும்புகிறார்கள். எனவே அரசாங்கம் இதனை கருத்தில் கொண்டு அதற்கான வழிமுறைகளை வகுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.