1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (21:54 IST)

மேனகா காந்தி பிரச்சாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் அதிரடி

இன்று மாலை உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் 72 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்த தேர்தல் ஆணையம் அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்தது. இதனால் இரு கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த நிலையில் சற்றுமுன் மத்திய அமைச்சர் மேனகா காந்தி 2 நாட்கள் பரப்புரையில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக பேசியதால் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் முஸ்லீம்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை மேனகா காந்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் சமாஜ்வாதி கட்சியின் ஆசம் கான் 3 நாட்கள் பரப்புரையில் ஈடுபடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது பாஜக தலைவர்கள் மீதே தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது