தேர்தல் பிரச்சாரத்தின்போது மருத்துவ உதவி செய்த தமிழிசை!

tamilisai
Last Modified செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (06:21 IST)
பாஜக தமிழக தலைவரும் தூத்துகுடி தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை செளந்திரராஜன் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரு இடத்தில் பிரச்சாரம் செய்தபோது ஒரு பெண் தனது மகனுக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டதாகவும் தனது மகனை காப்பாற்ற உதவுமாறும் மனு ஒன்றை கொடுத்தார். அதனை வாங்கி படித்து பார்த்த தமிழிசை, 'நீங்கள் கவலையே பட வேண்டாம். என்னுடைய கணவரே ஒரு டாக்டர் தான். ஒரு பைசா செலவில்லாமல் பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தின் மூலம் உங்கள் மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றுவார். உங்கள் மகன் 100 ஆண்டுகள் உயிர் வாழ்வார். உடனே நான் இந்த விஷயத்தை கவனித்து உங்கள் போன் செய்கிறேன்' என்று கூறி மொபைல் எண்ணையும் வாங்கி கொண்டார்.
ஏற்கனவே பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தில் பலர் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்று பலன் அடைந்திருப்பதாகவும் ரஜினிக்கே நாங்கள் சிகிச்சை அளித்துள்ளோம் என்றும் தமிழிசை கூறினார்.

தமிழிசையின் பேச்சால் நெகிழ்ந்து போன அந்த பெண்மணி ஆனந்தக்கண்ணீர் வடிக்க, உடனே 'அழுக வேண்டாம், நான் இருக்கின்றேன் என்று தமிழிசை ஆறுதல் கூறினார். தமிழிசை மீதும், பாஜக மீதும் பலருக்கு வெறுப்பு இருந்தாலும் நேற்றைய தமிழிசையின் இந்த பேச்சு அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. நிச்சயம் அந்த பேச்சை கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் தமிழிசைக்கு ஓட்டு போடுவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை


இதில் மேலும் படிக்கவும் :