வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (19:47 IST)

தினகரன் நல்லவர் ; ஓ.பி.எஸ் தனி மனிதர் : சுப்பிரமணிய சுவாமி அதிரடி

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்ல என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற தினகரன் தரப்பு ரூ.60 கோடி பேரம் பேசியதாகவும், இதற்கு முன்பணமாக ரூ.1.30 கோடி கொடுத்ததாகவும் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சுகேஷ் சந்தர் என்பவரை நேற்று டெல்லி போலீசார் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் விரைவில் சென்னை வருகிறார்கள் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணிய சுவாமி “ இரட்டை இலை விவகாரம் தொடர்பாக, தினகரன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அது வழக்கு என கூற முடியாது. அதன் மீது விசாரணை நடத்தி சார்ஜ் சீட் பதிவு செய்த பின்புதான் அது வழக்காக மாறும். தினகரன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை.
 
அதிமுகவில் பிளவு எதுவும் இல்லை. ஓ.பி.எஸ் ஒரு தனி மனிதர். அவர் ஒரு எம்.எல்.ஏ. அவ்வளவுதான். பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் சசிகலாவிற்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்க எந்த ஆதாரத்தில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது எனத் தெரியவில்லை. இது தவறான தீர்ப்பு” என அவர் கூறினார்.