தொடர்புடைய செய்திகள்
- பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே? தமிழக எம்.பி.க்கள் போராட்டம்
- மினி பட்ஜெட்டில் ஓப்போ ஏ78 5ஜி! குடுக்குற காசுக்கு வொர்த்தா?
- வருமான வரி விலக்கு - நீங்கள் எவ்வளவு வரி கட்ட வேண்டும்?
- பெயில் எடுக்க காசு இல்லாத கைதிகளுக்கு உதவி! – பட்ஜெட்டில் அறிவிப்பு!
- 80சி பயன்படுத்தி வரி விலக்கு பெற்றால் வரி வரம்புகள் கீழ் விலக்கு பெற முடியாது: அதிர்ச்சி தகவல்
மளிகைக் கடைக்காரரின் பில் போல பட்ஜெட் உள்ளது: பாஜக பிரபலம் கிண்டல்..!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை பாஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் புகழ்ந்து வரும் நிலையில் பாஜக பிரபலம் ஒருவர் இந்த பட்ஜெட் மளிகை கடைக்காரரின் பில் போல உள்ளது என கிண்டல் செய்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக பிரபலம் சுப்ரமணியன் சுவாமி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கூறுகையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மளிகை கடைக்காரரின் பில் போல் உள்ளது. உண்மையான நேர்மையான குறிக்கோள்கள் குறித்து வெளிப்படுத்துவதே சிறந்த பட்ஜெட் என்று கூறியுள்ளார்
பாஜக அரசின் பட்ஜெட்டை பாஜகவின் பிரபலமே கேலி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
