ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 30 மே 2022 (14:20 IST)

போலீஸ் மீது கேஸ் போடுவேன்: கார்த்திக் கோபிநாத் கைது குறித்து சுப்பிரமணியன் சுவாமி

swamy
போலீஸ் மீது கேஸ் போடுவேன் என கார்த்திக் கோபிநாத்தை கைது செய்த ஆவடி போலீசார் குறித்து பாஜக எம்பி சுப்பிரமணியசாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாஜக பிரமுகர் கார்த்தி கோபிநாத் கோவிலை புனரமைக்க போவதாக திரட்டிய நிதியில் மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார் 
 
அவரது கைதுக்கு அண்ணாமலை, எச் ராஜா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது சுப்பிரமணியசாமி இதுகுறித்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் 
 
ஆவடி போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்ததை அறிந்து நான் ஆச்சரியமடைந்தேன். ஒரு கோவில் புனரமைப்பதற்காக நிதி திரட்டியது தவறா இதனை கண்டித்து நான் போலீஸ் மீது கேஸ் போடுவேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது