செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 மே 2022 (17:48 IST)

போலீஸ் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் நடவடிக்கை! – போக்குவரத்து கூடுதல் ஆணையர்!

Traffic
சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணித்தாலும் ஹெல்மெட் அவசியம் என்ற புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தலைநகரமான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வரும் நிலையில் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் ஹெல்மெட் அணிவது உள்ளிட்ட போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சென்னையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம் என கூறப்பட்டு இந்த புதிய விதி இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. 

இந்நிலையில் இன்று சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 2,200 வழக்குகளும், பைக் பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் சென்றது தொடர்பாக 1,000 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் தெரிவித்துள்ளார்.