செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 26 மே 2022 (09:31 IST)

#GoBackModi - சென்னை வரும் மோடிக்கு அமோக வரவேற்பு!!

தற்போது டிவிட்டரில் #GoBack_Modi, #GoBackFascistModi போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றனர். 

 
மோடி சென்னை வருகை: 
பிரதமர் மோடி இன்று ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறையில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். ரூ.31,400 கோடி மதிப்பில் இந்த திட்டங்களை துவங்கி வைக்கிறார். சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர்.  
சென்னையில் பலத்த பாதுகாப்பு: 
பிரதமர் மோடி சென்னை வருகையை அடுத்து சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. ஆம், சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று மாலை 5:45 மணிக்கு சென்னை வரும் நிலையில் சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அத்துடன் சென்னையில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஈ.வே.ரா சாலையை தவிர்க்கவும்: 
பிரதமரின் வருகையையொட்டி ஈ.வே.ரா சாலை, தாசபிரகாஷ் முதல் சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் இந்த சாலைளை தவிர்க்க வேண்டும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. 
#GoBackModi ஹேஷ்டேக்:
திமுக எதிர்க்கட்சியாக இருந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போது #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை டிரண்டிங்கில் வைத்திருப்பதை வழக்கமாக செய்திருந்தது. 
 
ஆனால் தற்போது ஆளும் கட்சியாக திமுக இருக்கும் நிலையில் நாளை பிரதமரை வரவேற்க முதல்வரே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி சென்னை வருகை தருகிறார் என்றால் முந்தைய நாளே #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை தெறிக்க விடும் திமுக ஐடி விங் தற்போது அமைதியாக உள்ளது என நினைக்கப்பட்டது. 
 
ஆனால் தற்போது டிவிட்டரில் #GoBack_Modi, #GoBackFascistModi போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றனர். இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார் என தெரியாத நிலையில் மோடிக்கு தமிழகத்தில் மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு கிடைக்காது என்பது தெரியவந்துள்ளது.