வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 25 மே 2022 (16:10 IST)

துப்பாக்கியைக் காட்டி மிரட்டி....மனைவியிடம் வரதட்சணை கேட்ட போலீஸ்காரர்

dowry
ஆந்திர மாநிலத்தில் மனைவியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து, வரதட்சணை கேட்ட போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மா நிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ளா குருகுல பேட்டை என்ற பகுதியில் வசித்து வருபவர் சுகுமார்(28).இவர் முதிவேடு போலீஸ்  நிலையத்தில் துணை காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்  ஜாப்பர்ஸ்  விஷ்ணு பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.   இந்த நிலையில்  சுகுமார் தந்தை தேவரா மற்றும் தாயார் குருவராணி  ஆகியோர் ஜாப்பர்ஸிடம் ரு.10லட்சம்  வரதட்சணை கேட்டு விஷ்ணு பிரியாவை கொடுமை படுத்தியுள்ளதாக தெரிகிறது.

அப்போது, சுகுமார் தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியை விஷ்ணுபிரியா நெற்றிப்பொட்டில் வைத்து, வரதட்ஸ்ணை வாங்கிக்கொண்டு வரவில்லை என்றால் சுட்டுவிடுவதாக மிரட்டிஉள்ளார்,.

இதுகுறித்து, விஷ்ணு பிரியா தன் தாயிடம் தெரிவித்துள்ளார். அப்போது, அவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, சுகுமார்  மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவான அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.