1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified புதன், 21 செப்டம்பர் 2022 (09:44 IST)

திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் பாஜகவில் இணைகிறாரா..?

subbulakshmi1
நேற்று திமுகவில் இருந்து விலகுவதாகவும் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் கசிந்து கொண்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் திமுகவின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாகவும் அரசியலிலிருந்து விலகுவதாகவும் உடல் நலம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திமுகவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிருப்தியுடன் இருந்ததாகவும் இந்த நிலையில் நேற்று திமுகவில் இருந்து வெளியேறிய அவர் பாஜகவில் சேர இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் இந்த கருத்தை மறுத்த திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், ‘சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் பாஜகவில் இணைவதாக எந்த நேரத்திலும் கூறவில்லை என்றும் அவர் அரசியலிலிருந்து விலகுவதாக தான் கூறியுள்ளார் என்றும் தெரிவித்தார்