1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (14:13 IST)

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நாட்டில் நீட் தேர்வு- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

NEET
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி   நாட்டில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர  நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வுக்கு தமிழகத்தில் திமுக, அதிமுக, பாமக,  நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக, தன் தேர்தல் அறிக்கையில்,  நீட் தேர்வு  ரத்து செய்து முதல் சட்டமன்றக் கூட்டத்திலேயே  சட்டம் இயற்றப்படும் என கூறியிருந்தது.   இதன்படி, நீட் தேர்வை  தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, சட்டப்பேரவையில்  நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டமசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில்,  தமிழக மாணவர்களில் சிலர் நீட் தேர்வின் அச்சம் தோல்வி பயம், காரணமாகத் தற்கொலை செய்து வருவது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வு பற்றி மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான்,   உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி  நீத் தேர்வ் அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் சமன்செய்யும் நோக்கத்தில் நீட் நடத்தப்படுகிறது, இதுபற்றி நாடாளுமன்றத்தில் விரிவாக பேசப்பட்டுள்ளது, இருப்பினும் சென்னையில் உள்ள சாலையில் வைத்துச் சொல்கிறேன், இது மத்திய அரசு முடிவல்ல உச்ச நீதிமன்ற தீர்ப்பில் அரசு தலையிடமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய கல்விக் கொள்கையை தமிழ் நாடு விரைவில் ஏற்றுக் கொள்ளும் தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழியும் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.