1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (19:25 IST)

சுப உதயகுமார் லுக்அவுட் நோட்டீஸ் நிறுத்திவைப்பு: வெளிநாடு செல்ல அனுமதி!

Suba
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் அவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நோட்டீஸ் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுப உதயகுமார் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாத நிலை இருந்து வந்த நிலையில் தற்போது துருக்கியில் நடைபெறும் சர்வதேச அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தன் மீதான லுக் அவுட் நோட்டீஸை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
 
 இதனை அடுத்து துருக்கியில் நடைபெறும் சர்வதேச இதழியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் அவருடைய லுக் அவுட் நோட்டீசை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது