1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (18:47 IST)

காலாவதியான குளிர்பானங்கள்: 484 கடைகளுக்கு நோட்டீஸ்

காலாவதியான குளிர்பானங்கள்: 484 கடைகளுக்கு நோட்டீஸ்
தமிழகம் முழுவதும் ஏராளமான காலாவதியான குளிர்பானங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிவரும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகம் முழுவதும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்ததையடுத்து சுகாதாரத்துறை இதுகுறித்து அதிரடியாக ரெய்டு செய்தது
 
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் காலாவதியான குளிர்பானங்கள் வைத்திருந்த 484 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அளித்துள்ளது.
 
 கடந்த பிப்ரவரியில் 4777 கடைகளில் நடந்த சோதனையில் 640 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது