1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (11:48 IST)

ஸ்ரீ ஹரிகோட்டாவில் நாளை ஏவப்படும் எஸ்எஸ்எல்வி டி3 சிறிய ராக்கெட் காண்பதற்காக தனியார் அமைப்பு சார்பில் மாணவ மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர்...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ  விண்ணில் எஸ்எஸ்எல்வி -டி3 ராக்கெட்டை இன்று  ஏவுகின்றது. 
 
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் அமைப்பு மூலம் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளை இஸ்ரோவில் ஏவப்படும் ராக்கெட்டை காண்பதற்காக அழைத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
 
இதில் தனியார் பேருந்து மூலம் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்களின் உதவி உடன்  பேருந்து  மூலம் சென்றனர்.
 
முன்னதாக அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் சிறப்பு பூஜை செய்து இஸ்ரோவுக்கு  சென்றனர்.