ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (10:43 IST)

தடுப்பூசி போட்டுக்கொள்ள கல்லூரி மாணவர்கள் ஆர்வம்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாணவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசியை செலுத்திக்கொண்டு செல்கின்றனர். 
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்ரறை ஆண்டுகளாக கல்லூரிகள் செயல்படாமல் இருந்து வருகின்றன. தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் வருகிற செப்டம்பர் 1 முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரே மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள 112 கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாணவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசியை செலுத்திக்கொண்டு செல்கின்றனர்.