கேரளாவில் கோர முகம் காட்டும் கொரோனா!
கேரளாவில் தொடர்ந்து 3 வது நாளாக இன்று கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் தொடர்ந்து 3 வது நாளாக இன்று கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கு மேல் கேரளாவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,801 என்றும் கொரோனாவால் குணமானவர்களின் எண்ணிக்கை 18,573 என்றும் கேரள அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 179 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.