தொடர்புடைய செய்திகள்
- கல்லூரி மாணவியுடன் உதவி பேராசிரியர் நெருக்கம்.. வீடியோ எடுத்து மிரட்டியதாக புகார்.
- விசிக இருக்கும் கூட்டணியில் பாமக இணையுமா? ராமதாஸ் அளித்த அசத்தல் பதில்..!
- செங்கோட்டையனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய டிடிவி தினகரன்.. திடீர் ட்விஸ்ட்..
- அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது” -நயினார் நாகேந்திரன்
- டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில்? ஓபிஎஸ் தவெக கூட்டணியில்? மாறுகிறது அரசியல் களம்..!
மாணவியின் யூடியூப் வீடியோவுக்கு அவதூறு கருத்து வெளியிட்ட கல்லூரி முதல்வர் கைது.. நெல்லையில் பரபரப்பு..!
நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் சுமிதா, தனது கல்லூரி மாணவி ஒருவரின் யூடியூப் வீடியோவில் அவதூறாக கருத்து பதிவிட்ட விவகாரத்தில் உயர்கல்வித் துறையினரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி, கல்லூரி வளாகத்தில் தன்னை தரக்குறைவாக பேசியதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோவின் கீழ், மாணவியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் முதல்வர் சுமிதா மற்றும் அவரது கணவர் தரக்குறைவான கமெண்ட்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி, சுமிதா மற்றும் அவரது கணவரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்த நிலையில், அரசு ஊழியர் விதிகளுக்கு மாறாக செயல்பட்டதற்காகவும், மாணவியிடம் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்டதற்காகவும் தற்போது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
