சாதி அடையாள கயிறுகளுக்கு தடை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
பள்ளிகளில் சாதி அடையாள கயிறுகளுக்கு தடை என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பள்ளிகளில் சாதி அடையாள கயிறு கட்டும் மோதல் காரணமாக சமீபத்தில் நெல்லை அருகே உள்ள ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் பலியானார்
இந்த சம்பவம் காரணமாக சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான கயிறுகளை மாணவர்கள் அணியக்கூடாது என்றும் சாதி அடையாள கயிறுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
இதுகுறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் சாதி பிரிவினையை தூண்டுவோரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை எச்சரிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.